Monday, July 6, 2009

புரியவில்லையே........


உன்னை நான் நேசிக்கிறேனா?
புரியவில்லையே....
உன்னுடன் போட்ட சண்டையும்
உன்னைத் திட்டிய பேச்சுக்களும்
உன்னைப் பார்க்கும் போதெல்லாம்
ஏற்பட்ட கோபங்களும்
இப்போது காதலாய் மாறிவிட்டதா????
நம்ப முடியவில்லையே........

அடிக்கடி கண்கள்
உன்னைத் தேடுகிறது!
நீ என்னையே பார்ப்பதாய்
இதயம் நினைத்துக் கொள்கிறது!
நீ எதிரினில் வரும் போதெல்லாம்
இறக்கை முழைத்த உணர்வு!
ஏனடா?
ஏனடா இப்படி மாறிப் போனேன்???

புரியாத உணர்வுகள் கொடுக்கிறாய்!
என்ன முயன்றும்
அதைப் புரிந்து கொள்ளவே
முடியவில்லை!!!
இந்த உணர்விற்கு
என்ன பெயர் சூட்டுவது
என்றும் தெரியவில்லை!....

இன்னும் ஈரெட்டு நாட்கள் தான்!
அதன் பின் உன்னை நான்
பார்ப்பேனா என்று கூடத் தெரியாது!
இப்போது எதற்காக இந்த உணர்வு????

சிந்தனைகள்

· நல்ல பழக்க வழக்கங்கள் வருவதற்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அவற்றோடு வாழ்வது சுலபமே ஆகும். தீய பழக்க வழக்கங்கள் சுலபமாக வருவதாக இருக்கலாம். ஆனால் அவற்றோடு வாழ்வது கடினமாகும்.

· சிறு திட்டங்களை தீட்டாதீர்கள், நம் இரத்தத்தைக் கிளர்ந் தெழச் செய்யும் சக்தி அவற்றிற்கில்லை…. பெருந் திட்டங்களைத் தீட்டுங்கள்; நம்பிக்கையுடன் உயர்ந்தவற்றைக் குறி வைத்து வேலை செய்யுங்கள்.

· சுய கெளரவம் என்பது நம்மைப் பற்றி நாம் எப்படி எண்ணுகிறோம் என்பதே ஆகும். நம்மைப் பற்றிய நம் எண்ணமானது நம் வேலையில் நம் செயல்திறன் நம் உறவு முறைகள், பெற்றோர்களாக நாம் செயல்படும் விதம், வாழ்வில் நாம் சாதிப்பவை போன்ற எல்லாவற்றையும் மாற்றும் சக்தி கொண்டது. சுயகெளரவம் என்பது வெற்றி அல்லது தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.